உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / திருச்சியில் இரவில் மறியல் செய்த ஆட்டோ டிரைவர்கள்! என்ன நடந்தது? | Auto drivers | Trichy Police

திருச்சியில் இரவில் மறியல் செய்த ஆட்டோ டிரைவர்கள்! என்ன நடந்தது? | Auto drivers | Trichy Police

திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் இரு தரப்பின் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. ஆட்டோவை நிறுத்துவது தொடர்பாக நடந்த இந்த மோதலில் அரிவாள் வெட்டு ஏற்பட்டு நான்கு பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் பதட்டத்துடன் காணப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என ஒரு தரப்பு ஆட்டோ டிரைவர்கள் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். சக டிரைவர்கள் பிரச்னையை பெரிதாக்க வேண்டாம். முறையாக இடம் ஒதுக்கி தரப்படும் என போலீசார் பேச்சு நடத்தினர். ஆனால் போலீஸ் முன்பே வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பும் மோதும் சூழல் உருவானது. சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி லத்தியை எடுத்து கூட்டத்தை கலைத்தார். உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், ஆட்டோ டிரைவர்களை விரட்டி பிடித்து கைது செய்தனர். ஆட்டோ டிரைவர்கள் அங்கும் இங்குமாக தெறித்து ஓடினர். கமிஷனர் காமினி நேரடியாக லத்தியை சுழற்றியதும் சக போலீசார் வேகமெடுத்தனர். துணை கமிஷனர் ஈஸ்வரன் ஒரு டிரைவருக்கு பளார் என அரை விட்டு காலால் எட்டி உதைத்த சம்பவமும் அரங்கேறியது.

ஆக 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி