கர்நாடகாவையும் விட்டுவைக்காத மழை | Bengaluru Heavy rain| Rain at Bengaluru| bengaluru flood
Bengaluru Heavy rain| Rain at Bengaluru| bengaluru flood தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஓயாத நிலையில், அண்டை மாநிலமான கர்நாகடாவிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பெங்களூரில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழக - கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்துள்ள எலக்ட்ரானிக் சிட்டி, அத்திபள்ளி மற்றும் தமிழகத்தின் ஓசூரில் நேற்று பெய்த கனமழையால், ஓசூர்- பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. மாலையில் மழை ஓய்ந்ததும் ஒரே நேரத்தில் வாகனங்கள் படையெடுத்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓசூரில் 4 கிமீ துாரத்திற்கு வாகனங்கள் நின்றன. பெங்களூரில் நேற்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவர்கள் மழையில் சிக்கி அவதியுற்றனர். பெங்களூரில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்ததால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.