/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் சோதனை | Bomb Threat to Vijay House| TVK President
விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் சோதனை | Bomb Threat to Vijay House| TVK President
சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் மிரட்டல் விடுத்தார். நள்ளிரவு 2 மணிக்கு வந்த இந்த மிரட்டலை தொடர்ந்து, போலீசார், மோப்ப நாய் மற்றம் வெடிகுண்டு நிபுணர்களுடன் விஜய் வீட்டிற்கு விரைந்தனர். அவரது வீட்டில் வெடிகுண்டு கண்டறியும் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். எனினும் அங்கு வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் வெறும் புரளி என போலீசார் உறுதிப்படுத்தினர்.
அக் 09, 2025