உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ஏர்போர்ட்டுக்கு பெண் பயணி கொண்டு வந்த துப்பாக்கி குண்டு | Bullet | Airport | Coimbatore | Woman

ஏர்போர்ட்டுக்கு பெண் பயணி கொண்டு வந்த துப்பாக்கி குண்டு | Bullet | Airport | Coimbatore | Woman

கோவை ஏர்போர்ட்டில் இன்று காலை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். பெங்களூரு செல்லும் விமான பயணிகளில் சரளா ராமகிருஷ்ணன் என்பவரின் உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பையில் 9 mm வகை தோட்டா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் பயணியை பீளமேடு போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர் கோவையை சேர்ந்த தொழிலதிபர் சரளா என்றும், பெங்களூரு செல்ல வீட்டில் இருந்து கிளம்பியபோது துப்பாக்கி தோட்டா இருந்தததை கவனிக்காமல் எடுத்து வந்ததாகவும் கூறினார். அவரிடம் பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறுதாலக எடுத்து வந்தாக சரளா தெரிவித்தர் அவர்களின் சரளாவின் வாக்குமூலத்தை பதிவு செய்த பீளமேடு போலீசார், விசாரைனைக்கு அழைக்கும்போது வரவேண்டும் என எழுத்து பூர்வாமாக எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை