உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / சென்னை வழக்கறிஞர் திருச்சியில் சாய்ப்பு: ஏன்? chennai Lawyer Uma shankar hacked to death trichy

சென்னை வழக்கறிஞர் திருச்சியில் சாய்ப்பு: ஏன்? chennai Lawyer Uma shankar hacked to death trichy

திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி தாயுமானபுரத்தை சேர்ந்தவர் உமாசங்கர் (33). வழக்கறிஞர். சென்னையில் வசித்து வந்தார். இவரது அண்ணன் அழகேஸ்வரன் (37) . பாலக்கரை பகுதியில் அரிசி கடை வைத்துள்ளார். இருவருக்கும் திருமணமாகி விட்டது. தீபாவளி கொண்டாடுவதற்காக உமாசங்கர் சொந்த ஊரான வரகனேரிக்கு வந்திருந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணனும் தம்பியும் காந்தி மார்க்கெட்டுக்கு சென்று விட்டு, இன்று அதிகாலை 2 மணியளவில் வரகனேரி பெரியார் நகர் வளைவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 3 ஆசாமிகள் கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். உமா சங்கர் மார்பில் கத்திக்குத்து விழுந்தது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அழகேஸ்வரன் வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் வந்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். உமா சங்கர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய கொலையாளிகளை தேடி வருகின்றனர். வழக்கறிஞர் என்பதால் தொழில்ரீதியாக முன்விரோதம் இருந்துள்ளது. அதனால் அடியாட்களை ஏவி அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். உமாசங்கருக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என குடும்பத்தினரிடமும் விசாரணை நடக்கிறது. தீபாவளி கொண்டாட ஊருக்கு வந்த வழக்கறிஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. #ChennaiLawyer #UmaShankar #TrichyPolice #CrimeNews #LawyerMurder #GangViolence #JusticeForUma #CrimeReport #LawEnforcement #SafetyFirst #CommunityAwareness #LegalSystem #BrotherlyLove #TragicIncident #PoliceInvestigation #GangEscape #PublicSafety #CrimePrevention #ChennaiNews

அக் 20, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

m.arunachalam
அக் 20, 2025 20:18

பார் போற்றும் தமிழ்நாடு. எங்கே மனித தன்மை? ஏன் இந்த மிருக வெறி?. இந்த துணிச்சல் எப்படி? . எதை அடைய?. நகரங்கள் நரகங்களாகிவிட்டன. தெளிதல் நலம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி