கள்ளக்குறிச்சியில் வீட்டின் கதவை உடைத்து 4 ஆசாமிகள் துணிகரம் | crime | theft | kallakurichi
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசரிவர்மன். துபாயில் உள்ள ஒரு தனியார் கம்பெனி மேனேஜர். தன் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். இந்த சூழலில் தனது இரண்டாவது மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். பாஸ்போர்ட்டை ரினிவல் செய்ய கேசரிவர்மன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மாலை சென்னை கிளம்பி சென்றனர். வீட்டில் அவரது வயதான தந்தை முனியன் மற்றும் தாய் பொன்னம்மாள் மட்டும் இருந்துள்ளனர். இதை நோட்டமிட்ட ஆசாமிகள் இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்தனர். இருவரையும் தாக்கி தனி அறையில் வைத்து கட்டி போட்டனர். கத்தி முனையில் மிரட்டி பீரோவில் இருந்த 200 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர். பின் அவர்கள் பிடியில் இருந்து வெளியே வந்த முனியன் தனது மகனுக்கு நடந்த சம்பவத்தை கூறினார். சங்கராபுரம் போலீசார் நேரில் வந்து ஆய்வு செய்து தடயங்களை கைப்பற்றினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.