இரவில் நடந்த திக்திக் சம்பவத்தால் அச்சத்தில் மக்கள் | Crime News | Tirupattur
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பின்புற வாசல் பகுதியில் நேற்றிரவு இளைஞர் ஒருவரை 4 பேர் கும்பல், ஓட ஓட அரிவாளால் வெட்டியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். முகம், கை, காலில் வெட்டுபட்டு அந்த இளைஞர் சரிந்து கிடந்தார். கும்பல் தப்பியோடிவிட்டது. வெட்டுபட்ட இளைஞரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டார். போலீசார் விசாரித்ததில், கொலை செய்யப்பட்டவர் மின்நகரை சேர்ந்த 27 வயதான சண்முகநாதன் என்பது தெரிந்தது. முன்விரோதம் காரணமாக அவரை தீர்த்துகட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். மருத்துவமனை வாசலில் நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.