தனிமையில் இருந்த மாணவிக்கு என்ன நடந்தது?: விசாரணையில் திடுக் | North Chennai | Crime News
சென்னை, சோழிங்கநல்லூரை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை கடந்த 25ம் தேதி இளைஞர் ஒருவர் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தார். வீட்டில் தனியாக இருந்தபோது இச்சம்பவம் நடந்தது. தண்ணீர் கேட்பது போல் வீட்டுக்கு வந்த நபர், தம்மை தாக்கியும், பிளாடால் கையில் கீறியும், பலவந்தமாக வன்புணர்வு செய்ததாக போலீசில் மாணவி கூறினாள். செம்மஞ்சேரி மகளிர் போலீசார் விசாரணை செய்தனர். மாணவியின் கையில் லேசான கீறல் காயம் மட்டும் இருந்தது. அவரது வீட்டில் கண்ணாடி துண்டுகள் கிடைத்தன. அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் சந்தேகப்படும்படியான இளைஞர்களிடம் விசாரித்தனர். யானை கவுனி பள்ளம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவன் மாணவி வீட்டு சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். தினேஷை பிடித்து விசாரித்தபோது, திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. தினேஷ் துக்க நிகழ்வுகளில் கானா பாடல்கள் பாடி அதை சோஷியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். எற்கனவே கஞ்சா வழக்கில் சிறை சென்று வந்ததும் தெரிந்தது. யானை கவுனி அருகே செம்மஞ்சேரியில் உள்ள பாட்டி வீட்டுக்கு மாணவி சென்றபோது, தினேஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவனது சோஷியல் மீடியா பக்கங்களை மாணவி பாலோ செய்து நட்பை வளர்த்துள்ளார். சம்பவத்தன்று மாணவி தனியாக இருப்பதை அறிந்து வீட்டுக்கு சென்றுள்ளான் தினேஷ். மாணவியும் அனுமதித்து உள்ளார். தனிமையில் இருந்தபோது, மாணவியை கட்டாயப்படுத்தி தினேஷ், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவத்தால் பயமும், பதட்டமும் அடைந்த மாணவி, தினேஷை காட்டிகொடுக்காமல், யாரோ தம்மை வன்புணர்வு செய்ததாக கதை கட்டி விட்டு உள்ளார். போக்சோ பிரிவில் வழக்கு பதியப்பட்டு, தினேஷ் கைது செய்யப்பட்டான்.