உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பாம்பு கடித்து சிகிச்சைக்கு வந்த விவசாயி: டாக்டர் இல்லாமல் மரணம் | Cuddalore Tragedy | Rural Healthc

பாம்பு கடித்து சிகிச்சைக்கு வந்த விவசாயி: டாக்டர் இல்லாமல் மரணம் | Cuddalore Tragedy | Rural Healthc

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மங்களூரை சேர்ந்தவர் செந்தில்குமார். வயலில் வேலை செய்தபோது பாம்பு கடித்துள்ளது. சுற்றி இருந்தவர்கள் அவரை மீட்டு அதே கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது செந்தில்குமார் சுயநினைவுடன் இருந்துள்ளார். ஆனால் 3 மணி நேரமாக அங்கே டாக்டர்கள் வரவில்லை. முதலுதவி சிகிச்சை கூட அளிக்கப்படவில்லை. இதனால் விஷம் உடல் முழுவதும் பரவிய நிலையில் செந்தில் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அங்கிருந்த ஆம்புலன்ஸ்சை அடித்து நொறுக்கினர். ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டும் மறியலில் ஈடுபட்டனர். பணி நேரத்தில் டாக்டர் இல்லாததே செந்தில் இறப்புக்கு காரணம் என கூறினர். தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சு நடத்திய பின் அங்கிருந்து கலைந்து சென்றனர். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாமல் விவசாயி செந்தில்குமார் இறந்ததுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அரசு ஆஸ்பிடலில் தொடர்ச்சியாக நடக்கும் அவலங்கள் குறித்து சுட்டிக்கட்டினார். இந்த நிலையில் பாம்பு கடித்து இறந்த செந்தில்குமார் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். #SnakeBiteFatal #CuddaloreIncident #VeppurVillage #MangalurFarmer #TamilNaduTragedy #DoctorShortage #RuralIndiaCrisis #VenomousBite #HealthcareFailure #AidForVictims

அக் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை