சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை மனைவி கோரிக்கை | Erode | Attack
சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர் ரவுடி ஜான். இவர் கடந்த 19ம் தேதி மனைவி சரண்யாவுடன் திருப்பூருக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். நசியனூரில் வழிமறித்த கும்பல் ஜானை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு ரவுடி செல்லதுரை கொலை சம்பவத்துக்கு பழிக்கு பழியாக ஜான் கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். ஜான் கொலை செய்யப்பட்டபோது உடன் இருந்த மனைவி சரண்யாவிடம் போலீசார் 4 மணிநேரம் விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம்; சந்தேகப்படும் நபர்கள் பற்றி விசாரித்தனர். ஜான் கொலையில் ரவுடி செல்லதுரையின் உறவினர்கள் உட்பட 4 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சரண்யா கூறியிருக்கிறார்.