உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ரோட்டில் அசம்பாவிதம் இப்படியும் நடக்குது | Erode | Accident

ரோட்டில் அசம்பாவிதம் இப்படியும் நடக்குது | Erode | Accident

ரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள சவுண்டப்பூரை சேர்ந்தவர் கந்தாயாள், வயது 59. இவரது மகன் பூமேஸ்வரன் வயது 29. தாயும், மகனும் செம்புளிச்சாம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது செம்புளிச்சாம்பாளையம் மயானம் அருகே ரோட்டு ஓரம் கொட்டப்பட்டிருந்த குப்பைக்கு ஆசாமிகள் தீ வைத்து எரியூட்டி உள்ளனர். இதனால் உண்டான புகை அப்பகுதி முழுக்க சூழ்ந்து எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பரவியது. பைக்கில் சென்ற பூமேஸ்வரன் கரும்புகையில் சிக்கி எதிரே வந்த பஸ் மீது மோதினார். பைக்குடன் தூக்கி வீசப்பட்ட பூமேஸ்வரன் உடல் நசுங்கி இறந்தார். கந்தாயாள் ரோட்டில் விழுந்ததும் அவர் மீது பஸ் டயர் ஏறியதில் தலை துண்டானது. புகைமூட்டத்தால் கொடூர விபத்து நடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை