உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம் | Express Avenue Fire | Chennai M

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம் | Express Avenue Fire | Chennai M

ென்னை, ராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. முதல் மாடியில் உள்ள மின்சார அறையில் வயர்கள் கருகி அதில் இருந்து மற்ற இடங்களுக்கு தீ பரவியது. இதனால் மால் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. காலை பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். திருவல்லிக்கேணி, எழும்பூர், மைலாப்பூரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. மாலில் இருந்த பொதுமக்களை தீயணைப்பு படையினர் பத்திரமாக வெளியேற்றினர். முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்ட மால் என்பதால் வெளிகாற்று உள்ளே வருவதற்காக வழி பெரிதாக இல்லை. தொடர்ந்து கரும்புகை கட்டடத்துக்கு உள்ளேயே சூழ்ந்துகொண்டதால், அதனை உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. மாலில் உள்ள 4 நுழைவு வாயில்கள் வழியாக புகையை வெளியேற்றும் பணி நடக்கிறது. இது முழுவதுமாக முடிய 4 மணி நேரம் ஆகும் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். கரும்புகை வெளியேறும் வரை ஊழியர்கள் யாருக்கும் மாலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கட்டடத்தின் அனைத்து கேட்களும் மூடப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் பொதுமக்களை போலீசார் அண்ணா சாலையில் தடுத்து நிறுத்தி மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தினர். #ExpressAvenue #ChennaiFire #ExpressAvenueMall #ChennaiMallFire #Royapettah #TamilNaduNews #FireAccident #SmokeEvacuation #ChennaiToday #MallFire

நவ 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி