உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / அப்பாவின் கடைசி ஆசையை பூர்த்தி செய்த அப்பு: கடலூர் சம்பவம் | father dies | son marriage at funeral

அப்பாவின் கடைசி ஆசையை பூர்த்தி செய்த அப்பு: கடலூர் சம்பவம் | father dies | son marriage at funeral

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கவணை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி கண்ணம்மாள். இவர்களது மகன் அப்பு. வழக்கறிஞர். இவரும், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் விஜயசாந்தியும் 4 ஆண்டாக காதலித்தனர். இவர்களது காதலை அப்பு வீட்டார் ஏற்றுக் கொண்டனர். ஒரே சமூகமாக இருந்தாலும்கூட விஜயசாந்தி வீட்டார் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், அப்புவின் தந்தை உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் திடீரென இறந்தார். நேற்று மாலை இறுதிச்சடங்குகள் நடந்தன. அப்புவின் திருமணத்தை பார்த்து விட்டுத்தான் போவேன் என செல்வராஜ் கூறி வந்தார். அதனால் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அப்பு முடிவு செய்தார். அவரது இறுதிச்சடங்கிலேயே விஜயசாந்தியை திருமணம் செய்ய முடிவு செய்தார். அதை காதலி விஜயசாந்தியிடம் போனில் சொல்ல, அவரும் ஓகே என்றார். பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி காதலன் அப்பு வீட்டுக்கு வந்தார். தந்தையின் கையால் தாலியை எடுத்து கொடுக்க வைத்து, அதை விஜயசாந்தி கழுத்தில் அப்பு கட்டினார். தந்தையின் இறுதிச்சடங்கிலேயே மகன் திருமணம் நடந்தது.

ஏப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ