உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / சென்னையில் அடுத்தடுத்து 2 சம்பவம்: ரவுடி கும்பல் வெறியாட்டம் gang attacks woman and rowdy with swor

சென்னையில் அடுத்தடுத்து 2 சம்பவம்: ரவுடி கும்பல் வெறியாட்டம் gang attacks woman and rowdy with swor

சென்னை அண்ணா நகர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் 27. ரவுடி. இவர் மீது அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்று மாலை அன்னை சத்யா நகர் பகுதியில் தெருவில்நின்று போனில் பேசிக் கொண்டிருந்தபோது 3 மோட்டார் சைக்கிளில் 6 ஆசாமிகள் வந்தனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். அரிவாளால் ராபர்ட்டை சரமாரியாக வெட்டி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த ராபர்ட்டை போலீசார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராபர்ட் இறந்து விட்டதாக கூறினர்.

பிப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை