/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ சிதம்பரம் அருகே கஞ்சா வியாபாரி மீது போலீசார் டுமீல் | Ganja dealer | Accused | Chidambaram | Chidamb
சிதம்பரம் அருகே கஞ்சா வியாபாரி மீது போலீசார் டுமீல் | Ganja dealer | Accused | Chidambaram | Chidamb
சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், எஸ்ஐ குப்புசாமி ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். சிவபெருசாலையில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்ற 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த பையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நவீன், கௌதமன், அருண் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மூவரும் பல நாட்களாக கஞ்சா விற்பனை செய்து வருவதும் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்பதும் தெரிந்தது.
நவ 23, 2025