உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / போன் பண்ணது யாருனு தெரியாதா? மனைவி ஆவேசம்; திருப்பூரில் பதற்ற நிலை Hindu Munnani balamurugan dies

போன் பண்ணது யாருனு தெரியாதா? மனைவி ஆவேசம்; திருப்பூரில் பதற்ற நிலை Hindu Munnani balamurugan dies

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டுக்கு சென்று திரும்பிய திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகனை இன்று அதிகாலை மர்ம ஆசாமிகள் வெட்டிக் கொன்றனர். நள்ளிரவில் போன் போட்டு அழைத்துச் சென்று மர்ம ஆசாமிகள் பாலமுருகனை வெட்டியுள்ளனர். இந்த சம்பவம் இந்து முன்னணி மற்றும் பாஜவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2 பேரை பிடித் விசாரித்து வரும் நிலையில், கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி பாலமுருகனின் மனைவி ேஹமமாலினி மற்றும் 500க்கு மேற்பட்ட இந்து முன்னணியினர் மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். ஆனால், என் புருஷனை போன் போட்டு கூப்பிட்டது யார்னு தெரியாம உடலை வாங்க மாட்டேன் என, பாலமுருகனின் மனைவி ஹேமமாலினி கூறினார். ஆம்பளையாக இருந்திருந்தால் என் புருஷன் முன்னாடி நேருக்கு நேர் வந்திருக்கணும்; அதைவிட்டுட்டு பொம்பளை மாதிரி போன் போட்டு கூப்பிட்டு கொன்று விட்டார்களே.. என சொல்லி கதறினார்,ஹேமமாலினி. 30 வயது நிரம்பிய பாலமுருகனுக்கு 6 மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்தது. மனைவி ஹேமமாலினி தன் தாயார் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் பாலமுருகன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜூன் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ