இன்னும் மீட்கப்படாத பலர் உள்ளனர்: அமைச்சர் பகீர் தகவல் | Karur TVK
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் இறந்துள்ளனர் என்று மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. மயக்கமடைந்து ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் 12 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 60க்கும் மேற்பட்டவர்கள் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். இறப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, விஜய் பிரசாரம் மேற்கொண்ட பகுதியில் கூடியிருந்தவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த 29 பேரின் உடல்கள் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டுள்ளன. அவர்கள் பிரசார கூட்டத்திலேயே இறந்துள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்கள் யாரும் இறக்கவில்லை. சம்பவ இடத்தில் இருந்து இன்னும் சடலங்கள் வரலாம் என்றும் அச்சத்தில் உள்ளோம் என சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.