உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / போலீசை நம்ப மாட்டோம்: சிபிஐயிடம் கொடுங்க: கவின் தந்தை | kavin case | love | Tirunelveli

போலீசை நம்ப மாட்டோம்: சிபிஐயிடம் கொடுங்க: கவின் தந்தை | kavin case | love | Tirunelveli

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் செல்வ கணேஷ், திருநெல்வேலியை சேர்ந்த பெண் டாக்டரை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெண் டாக்டரின் அண்ணன் சுர்ஜித், கவின்குமாருடன் சமரசம் பேசுவதுபோல நடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக் கொன்றார். தமிழகத்தையே உலுக்கிய இந்த ஆணவக்கொலை தொடர்பாக, சுர்ஜித்தை கைது செய்து போலீசார் பாளை சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி இருவரும் ஆயுதப்படையில் எஸ்.ஐ.,யாக பணிபுரிகின்றனர். கொலைக்கு அவர்கள் தூண்டுதல்தான் காரணம் என கவின்குமார் தாய் தமிழ்ச்செல்வி புகார் அளித்ததன் அடிப்படையில் எஸ்ஐ தம்பதியும் வழக்கில் அக்கியூஸ்டாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், இருவரையும் சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவு ஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டார். வெட்டிக் கொல்லப்பட்ட ஐ.டி ஊழியர் கவின் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இது சென்சேஷனல் கேசாக மாறியுள்ள நிலையில், சுர்ஜித்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஓராண்டுக்கு சிறையில் இருந்து வெளிவர முடியாத நிலை சுர்ஜித்துக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சப் இன்ஸ்பெக்டர் தம்பதியை கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என கவின் குடும்பத்தினர் சொந்த ஊரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜூலை 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை