நூலிழையில் உயிர் தப்பிய பெண் போலீஸ்: பரபரப்பு சம்பவம்
தேனி மாவட்டம், கூடலூர் கேகே நகரை சேர்ந்தவர் அம்பிகா. கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிள் ஆக இருக்கிறார். பணி முடிந்து வீட்டு செல்வதற்காக கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 55 மதிக்கத்தக்க நபர் ஒருவர் அம்பிகாவை கீழே தள்ளிவிட்டு மறைத்து வைத்து இருந்த அரிவாளால் வெட்ட முயன்றார். அம்பிகா அவரிடம் இருந்து தப்பிக்க போராடினார். அப்போது அவரது கண் அருகே வெட்டு விழுந்தது. சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ் ராஜா காயமடைந்த அம்பிகாவை மீட்டு கம்பம் மருத்துவமனையில் சேர்த்தார். அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசரித்தனர். அவரது பெயர் குபேந்திரன். அம்பிகாவின் பக்கத்து வீட்டில் வசிப்பவர். இருவரின் குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. முன்விரோதம் காரணமாக அவரை நடுரோட்டில் வைத்து குபேந்திரன் வெட்டி இருக்கிறார். வெட்டு விழுந்ததில், ஹெட் கான்ஸ்டபிள் அம்பிகாவின் கண்ணுக்கு செல்லும் முக்கிய நரம்பு பாதிக்கப்பட்டு இருப்பதால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.