/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ மதுரை மக்கள் ஆவேசம்... உள்ள வந்து பாக்க மாட்டீங்களா... | Madurai water logging | madurai heavy rain
மதுரை மக்கள் ஆவேசம்... உள்ள வந்து பாக்க மாட்டீங்களா... | Madurai water logging | madurai heavy rain
மதுரையில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் கனமழை வெளுத்து வாங்கியது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. பிபி குளம் பகுதியில் உள்ள முல்லை நகர் குடியிருப்பு வெள்ளத்தில் தத்தளித்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அந்த பகுதியை கலெக்டர் சங்கீதா, எம்பி வெங்கடேசன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பார்வையிட சென்றனர். மக்களிடம் பாதிப்பு பற்றி விசாரித்தனர். அப்போது சில பெண்கள் ஆக்ரோஷமாக கோஷம் போட்டனர். இவ்வளவு நாள் வராம, இப்ப ஏன் வந்தீங்க என்று கேள்வி எழுப்பினர்.
அக் 26, 2024