உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ஒரே மேடையில் 2 பெண்களுடன் திருமணம்: கடைசியில் டுவிஸ்ட் | Marriage issue | 2 Bride | Minor girls | An

ஒரே மேடையில் 2 பெண்களுடன் திருமணம்: கடைசியில் டுவிஸ்ட் | Marriage issue | 2 Bride | Minor girls | An

ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், கோரண்ட்லா மண்டலம் கும்மையா காரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கங்கராஜூ. இவருக்கு கர்நாடகாவின் சிக்பல்லாபூரை சேர்ந்த 2 இளம் சகோதரிகளுடன் திருமணம் செய்ய பெற்றோர் சம்மதத்துடன் முடிவு செய்யப்பட்டது. கங்கராஜூக்கு இரண்டு மணப்பெண் பெயர்களுடன் திருமண பத்திரிக்கை அச்சிடப்பட்டன. இரண்டு பெண்களுடன் திருமணம் என்ற பத்திரிக்கை வைரலாக பரவியது. கோரண்ட்லாவில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் உறவினர்கள் வர தொடங்கினர். சோசியல் மீடியாவில் வைரலான இந்த திருமண பத்திரிகை குழந்தைகள் நல அதிகாரிகள் கவனத்திற்கும் சென்றது. மணப்பெண்களின் வயதை கண்டறிந்தபோது, ​​இருவரும் மைனர்கள் என்பது தெரிந்தது. மண்படத்திற்கு வந்த அதிகாரிகள் மணமகன் மற்றும் சிறுமியின் உறவினர்களுக்கு ஆலோசனை வழங்கினர். மைனர்களை திருமணம் செய்வது சட்டத்திற்கு எதிரானது என்று எடுத்து கூறினர். ஆனால் ஏற்கனவே திருமண பத்திரிக்கை அச்சிட்டு, உறவினர்களை அழைத்து அவர்களும் வந்து விட்டனர். இனி எப்படி திருமணத்தை நிறுத்த முடியும் என்று இரு வீட்டாரும் மறுப்பு தெரிவித்தனர். அதை ஏற்காத அதிகாரிகள் திருமணத்தை அதிரடியாக நிறுத்தினர். ஒருவர் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பத்திரிகை வைரலான நிலையில், அது மைனர் பெண்கள் என தெரிந்து திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ