உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / அழுகிப்போன உணவு பொருட்கள் அழிப்பு | Marthandam | Food safety officers

அழுகிப்போன உணவு பொருட்கள் அழிப்பு | Marthandam | Food safety officers

மார்த்தாண்டத்தை அடுத்த அருமனை பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். உணவகங்கள், பழக்கடைகளில் திடீர் ஆய்வு நடந்தது. சுகாதாரமற்ற அழுகிப்போன உணவுப் பொருட்களை பிரீசரில் வைத்து இருந்தது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றி அழித்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய ஆறு கடைகளுக்கு 12 ஆயிரம் அபராதம் விதித்தனர். 4 ஓட்டல்களுக்கு நான்காயிரம் அபராதம் , 7 ஓட்டல்களுக்கு எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டது. ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 25 ஆயிரம் அபராதம் விதித்து சீல் வைத்தனர்.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !