உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / போலீஸ் ஏட்டை தாக்கிய 7 பேர் கைது; 2 பேர் தலைமறைவு | Rajapalayam Viral video | Rajapalayam Police | P

போலீஸ் ஏட்டை தாக்கிய 7 பேர் கைது; 2 பேர் தலைமறைவு | Rajapalayam Viral video | Rajapalayam Police | P

விருதுநகர் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக்கில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மது அருந்தியவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் சேர்ந்து இசக்கி என்பவரை தாக்கி உள்ளனர். ரத்த காயங்களுடன் வடக்கு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீஸ் ஏட்டு ராம் குமார், கருப்பசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விசாரிக்க சென்றுள்ளனர். தாக்கியவர்களை தேடிய போது, அவர்கள் மற்றொரு தனியார் பார் அருகே இருந்துள்ளனர். போலீசார் விசாரணைக்கு அழைத்த போது அந்த கும்பல் தகராறு செய்துள்ளது. ஒரு கட்டத்தில் போலீசாரின் லத்தியை பிடுங்கி போலீசார் இருவரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்க துவங்கியது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். 2 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

நவ 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி