உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ஸ்கிட் ஆன வாகனம்: பெண், ஆசிரியருக்கு சோக முடிவு | Road accident Uttangarai police Krishnagiri cctv

ஸ்கிட் ஆன வாகனம்: பெண், ஆசிரியருக்கு சோக முடிவு | Road accident Uttangarai police Krishnagiri cctv

மழையால் நடந்த விபத்து மாமனார், மருமகளுக்கு சோகம் நானே கொன்னுட்டேன் கதறி அழுத கணவர் கடலூர் மாவட்டம் மணப்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவரது மனைவி சந்தியா(28). மணப்பள்ளியில் கட்டி வரும் வீட்டுக்கு டைல்ஸ் வாங்க மனைவி சந்தியா, சித்தப்பா ஜெயராமன்(58), உறவினர் வேலாயும் (66) ஆகியோருடன் காரில் ஓசூர் சென்றார். ஓசூரில் கிரானைட் கல்லுக்கு ஆடர் கொடுத்துவிட்டு காரில் ஊருக்கு புறப்பட்டனர். ஊத்தங்கரை அருகே வந்தபோது மழை பெய்து கொண்டிருந்தது. எதிர் திசையில் வந்த டாடா ஏஸ் வாகனத்தின் டயர் வழுக்கியதால் கார்த்திக் கார் மீது நேருக்கு நேராக மோதியது. இதில், கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது, சந்தியா, ஜெயராமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கார்த்திக் காயமின்றி தப்பினார். உறவினர் வேலாயுதம், டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த அமானுல்லா (31) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை