உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / சேலத்தில் தூக்கத்தில் பிரிந்த உயிர்கள்! மனைவி, குழந்தை சீரியஸ் | salem Crime | Gangavalli Police | I

சேலத்தில் தூக்கத்தில் பிரிந்த உயிர்கள்! மனைவி, குழந்தை சீரியஸ் | salem Crime | Gangavalli Police | I

சேலம், கெங்கவல்லி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார் வயது 42. மனைவி தவமணி வயது 38, இவர்களது குழந்தைகள் வித்யதாரணி, 13, அருள்குமாரி 10, அருள் பிரகாஷ் 5. அசோக்குமாருக்கும், தவமணிக்கும் குடும்ப பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தை பிரிந்த அசோக்குமார் சில ஆண்டுகளாக நெய்வேலியில் ஆட்டோ ஓட்டி வந்தார். அவ்வப்போது போனில் பேசும் போதும் தகராறு இருந்துள்ளது. இந்த சூழலில் நேற்று இரவு அசோக்குமார் தவமணி வீட்டுக்கு வந்துள்ளார். இன்று காலை தவமணி வீட்டுக்கு வந்த உறவினர்கள் தவமணி மற்றும் மூன்று குழந்தைகளும் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகே சென்று பார்த்தபோது அருள் பிரகாஷ், வித்யதாரணி உயிருடன் இல்லை. தலை, கழுத்து, மார்பு என வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்த தவமணி மற்றும் அருள்குமாரி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் தலையில் லேசான வெட்டு காயத்துடன் அசோக்குமார் கிடந்துள்ளார். கெங்கவல்லி போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். மது போதையில் காயத்துடன் இருந்த அசோக்குமார், யாரோ சிலர் இது போல வந்து வெட்டி விட்டனர் என கூறி உள்ளார்.

பிப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை