உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / தனியார் பள்ளி முன் செக்யூரிட்டி கதையை முடித்த ஆசாமிகள்:பகீர் தகவல்கள் | vaniyambadi

தனியார் பள்ளி முன் செக்யூரிட்டி கதையை முடித்த ஆசாமிகள்:பகீர் தகவல்கள் | vaniyambadi

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சேர்ந்தவர் இர்ஃபான் வயது 40. வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை சைக்கிளில் பள்ளிக்கு வந்தார். பள்ளி முன் சைக்கிளை விட்டு இறங்கி தள்ளிச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் 3 மர்ம நபர்கள் வந்தனர். பயந்து ஓட முயன்ற இர்ஃபானை விரட்டிச் சென்று தாக்கி கீழே தள்ளி, சரமாரி கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். சில நொடிகளில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

ஏப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை