உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / 2 பேர் காயமடைந்து சிவகாசி ஆஸ்பிடலில் அட்மிட்! Sivakasi | Fireworks | Explosion

2 பேர் காயமடைந்து சிவகாசி ஆஸ்பிடலில் அட்மிட்! Sivakasi | Fireworks | Explosion

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் சுப்ரீம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. வழக்கம் போல், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயில் கருகி மாரியப்பன், முத்துவேல் ஆகிய 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் பலத்த காயமுற்று, சிவகாசி அரசு ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பட்டாசு தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து, M.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜூலை 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை