/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ ஆசிரியை செயின் பறிப்பு இளைஞருக்கு தர்ம அடி | Snatching | Gold chain | Theft | Police
ஆசிரியை செயின் பறிப்பு இளைஞருக்கு தர்ம அடி | Snatching | Gold chain | Theft | Police
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே இம்மிடிநாயக்கனப்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு குருபரபள்ளியைச் சேர்ந்த மேனகா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக உள்ளார். இவர் குருபரபள்ளியில் இருந்து பஸ்சில் சென்று சாமல்பள்ளம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அரை கிலோ மீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டும். வழக்கம்போல இன்று காலை சாமல்பள்ளம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் டிப் டாப்பாக வந்த இளைஞர் மேனகாவின் 5 சவரன் செயினை அறுத்துக் கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த மேனகா கூச்சலிட்டுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், செயினை அறுத்துச் சென்ற இளைஞரை விரட்டி சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
அக் 15, 2025