உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / தப்பி ஓடாமல் இருக்க ஸ்பிரே அடித்து தீர்த்து கட்டிய கும்பல் | Telangana | CPI | Crime News

தப்பி ஓடாமல் இருக்க ஸ்பிரே அடித்து தீர்த்து கட்டிய கும்பல் | Telangana | CPI | Crime News

தெலங்கானாவின் நாகர் கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையை சேர்ந்தவர் சந்து ரத்தோட். வயது 47. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஹைதராபாத் நகர குழு உறுப்பினராக இருந்தார். இன்று அவர், ஷாலிவாஹன நகர் பூங்காவில் வழக்கம்போல் வாக்கிங் சென்று கொண்டு இருந்தார். மனைவி, மகளும் அவருடன் சென்றிருந்தனர். அப்போது காரில் வந்து இறங்கிய சிலர், சந்து ரத்தோடை மறித்து அவர் முகத்தில் மீது மிளகு ஸ்பிரே அடித்துள்ளனர். நிலைகுலைந்துபோன அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். சத்தம் கேட்டு பூங்காவில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் காரில் தப்பி சென்றனர். மக்களிடம் நன்கு அறிமுகமான சந்து ரத்தோட்டை, மர்ம நபர்கள் 5 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாக மாலக்பேட்டை போலீசார் தெரிவித்தனர். கொலை நடந்த ஷாலிவாஹன நகர் பூங்கா மூடப்பட்டது. தடயவில் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். அரசியல் எதிரிகளால் இந்த கொலை நடந்திருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.

ஜூலை 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை