உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / 42 வயது பெண்ணுக்கு இரவில் நடந்த சோகம் | Thanjavur Women | Police | Arrest

42 வயது பெண்ணுக்கு இரவில் நடந்த சோகம் | Thanjavur Women | Police | Arrest

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆஸ்பிடலில் கடந்த மாதம் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ள நிலையில் தமிழகத்திலும் இதுபோல ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் கடந்த 3 ஆம் தேதி இரவு 42 வயது பெண் பஸ்சுக்காக நின்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்தும் பஸ் எதுவும் வரவில்லை. அப்போது அந்த வழியாக இரண்டு இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளனர். பெண் பஸ் ஸ்டாப்பில் தனியாக நிற்பதை பார்த்ததும் பைக்கை நிறுத்தினர். இதுக்கு மேல் இங்கு பஸ் வராது. நீங்க போகும் இடத்தை தாண்டி தான் நாங்களும் போறோம் என்றனராம். இளைஞர்கள் சொன்னதை நம்பிய பெண் என்னை போற வழியில் இறக்கிவிட முடியுமா? என லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து இளைஞர் ஒருவரின் பைக்கில் ஏறிய பெண் அவர்களுடன் போனார். இன்னொரு இளைஞர் பைக்கில் பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பைக்கை நிறுத்திய இளைஞர்கள் பெண்ணின் வாயை பொத்தி வயலுக்குள் இழுத்து சென்றனர். தப்பிக்க முயன்ற பெண்ணை இளைஞர்கள் இருவரும் பலமாக தாக்கியதில் அவர் மயக்க நிலைக்கு சென்றார். நிலை குலைந்துபோன பெண்ணை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை