உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / சென்னை திருவொற்றியூர் பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு! 12 பேர் கைது!

சென்னை திருவொற்றியூர் பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு! 12 பேர் கைது!

திருவொற்றியூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் தனுஷ். அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இதே பள்ளியில் சண்முகபுரத்தைச் சேர்ந்த தனுஷ்குமார், அண்மையில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், தனுஷுடன் படிக்கும் ஜெய்கேஷ் என்ற மாணவருக்கும் தனுஷ்குமாருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஜெய்கேஷுக்கு ஆதரவாக தனுஷ் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுதான் அடுத்தகட்ட பிரச்னைக்கு காரணமாகியிருக்கிறது. வெள்ளிக்கிழமை ஜெய்கேஷ் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி முடிந்ததும் தனுஷ் வீட்டுக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த தனுஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், தனுஷை பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கி உள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். காயமடைந்த நிலையில் கிடந்த தனுஷ் பொதுமக்கள் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது தனுஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். Thiruvottiyur #ThiruvottiyurNews #ChennaiNews #ChennaiCrime #TamilNaduCrime #StudentDeath #StudentCrime #SchoolStudent #SchoolCrime #StudentNews #CrimeNews #CrimeNewsTamil #TamilNews #TamilNewsToday #TamilBreakingNews #BreakingNews #ChennaiCrimeNews #PoliceInvestigation #PoliceNews #Dinamalar #DinamalarNews #TamilNewsChannel #TamilNaduNews #Chennai #ViralNews

ஆக 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை