தம்பியை திருத்த நினைத்த அண்ணனுக்கு சோகம் | Tiruvallur | bomb
திருவள்ளூர் பேரம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் முகேஷ், வயது 25. வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளை செய்கிறார். இவரது தம்பி ஜீவா. இவரும் சின்ன மண்டலியை சேர்ந்த ஆகாசும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து கஞ்சா புகைப்பது வாடிக்கை. இதனை ஜீவாவின் அண்ணன் முகேஷ் கண்டித்து வந்தார். இனி ஆகாஷ் உடன் சேர்ந்தால் நடப்பதே வேற என எச்சரித்துள்ளார். இதையடுத்து ஜீவா கஞ்சா புகைக்க செல்லவில்லை. அண்ணன் முகேசுடன் சிலிண்டர் சப்ளை செய்ய சென்றார். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், ஜீவா வீட்டுக்கு போனார். முகேஷ்-ஆகாஷ் இடையே வாக்குவாதம் உண்டானது.
ஜூன் 26, 2025