உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / அசந்து தூங்கும் போது நடந்த சம்பவம்; அனைவரும் நலம் | Trichy Bus Accident | Bus Fire

அசந்து தூங்கும் போது நடந்த சம்பவம்; அனைவரும் நலம் | Trichy Bus Accident | Bus Fire

நெல்லை, திசையன்விளையில் இருந்து 27 பயணிகளுடன் சென்னை நோக்கி ஆம்னி பஸ் நேற்று இரவு கிளம்பியது. நள்ளிரவில் திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தை கடந்த போது திடீரென பஸ்சின் பின் பக்க டயர் வெடித்தது. விபத்து நிகழாத வண்ணம் டிரைவர் பஸ்சை நிப்பாட்டினார். அடுத்த கணமே உராய்வினால் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பஸ்சில் இருந்த பயணிகளை எழுப்பி பாதுகாப்பாக வெளியேற்றினர். அதற்குள் தீ மளமளவென பரவி பஸ் முழுதும் பற்றி கொண்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால் பஸ் முழுதும் எரிந்து சேதமானது. நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள் மாற்று பஸ்சில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நள்ளிரவில் பஸ் பற்றி எரியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை