உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / தூத்துக்குடி உரத்தொழிற்சாலையில் நடந்த சோகம் | TAC Factory | Thoothukudi

தூத்துக்குடி உரத்தொழிற்சாலையில் நடந்த சோகம் | TAC Factory | Thoothukudi

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் டாக்(TAC) உரத்தொழிற்சாலை இயங்கி வருகிறது. உரத்தொழிற்சாலைக்கு சொந்தமான துணை நிறுவனத்தில் சோடா ஆஸ், அமோனியம் குளோரைடு கெமிக்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு அமோனியா வாயு எடுத்து செல்லும் பைப்லைனில் கசிவு ஏற்பட்டது. சரி செய்யும் பணியில் ஹரிஹரன், தன்ராஜ், மாரிமுத்து, விஷ்ணு, ஹரி பாஸ்கர் ஆகிய 5 ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென அம்மோனியா வாயு அதிக அளவில் கசிந்துள்ளது. அதனை சுவாசித்து ஊழியர்கள் ஒவ்வொருவராக மயங்கி விழுந்துள்ளனர்.

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி