/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ நிலச்சரிவில் சிதறிய 133 கை, கால் மீட்பு! சடலம் எங்கே? | wayanad landslide | chooralmala | Mundakkai
நிலச்சரிவில் சிதறிய 133 கை, கால் மீட்பு! சடலம் எங்கே? | wayanad landslide | chooralmala | Mundakkai
கேரளாவின் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மொத்த நாட்டையும் உலுக்கி இருக்கிறது. முண்டக்கை, சூரல்மலை, ஆறு பகுதிகளில் மீட்பு படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை 340 பேர் சடலம் கிடைத்துள்ளது. 250 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். நிலச்சரிவு அபாய பகுதியில் இருந்து இதுவரை 9 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் 92 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இன்னும் 250 பேரை காணவில்லை. மரண எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே மீட்பு பணியின் போது இதுவரை 340 சடலங்கள் கிடைத்ததோடு, பல உடல் பாகங்களும் தனித்தனியாக கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆக 03, 2024