உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மம்தா பதவி விலக கோரி போராட்டம் வெடித்தது-பதட்டம் | kolkata woman doctor | kolkata Nabanna protest

மம்தா பதவி விலக கோரி போராட்டம் வெடித்தது-பதட்டம் | kolkata woman doctor | kolkata Nabanna protest

கொல்கத்தாவில் படிப்படியாக போராட்டங்கள் குறைந்து வந்த நிலையில், Paschimbanga Chhatra Samaj என்ற புதிய மாணவர் அமைப்பு மிகப்பெரிய போராட்டத்தை அறிவித்தது. கொல்கத்தா கொடூரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் மம்தா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொல்கத்தா தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். தலைமை செயலகத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டக்காரர்கள் தலைமை செயலகத்துக்குள் நுழைவதை தடுக்க ராட்சத பேரிக்கார்டுகளை போலீசார் அடுக்கி தடுப்பு வேலி அமைத்தனர். மம்தாவின் முகாம் அலுவலகத்தை சுற்றிலும் போலீஸ், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே, சொன்னது போல் இன்று போராட்டம் துவங்கியது. திரளான மாணவர் அமைப்பினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக வந்தனர். மம்தா அரசுக்கு எதிராக கோஷம் போட்டப்படி தலைமை செயலகத்தை நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள் தடுப்புகளை தாண்ட முயன்றதால் அவர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அவர்கள் மீது தண்ணீரை பய்ச்சி அடித்தனர். ஆனால் யாரும் கலைந்து போகவில்லை. இதனால் தடியடி நடத்தினர். இதையடுத்து பரபரப்பும், பதட்டமும் தொற்றியது.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி