உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / நெட்டில் போட்ட கொடுமை CM சொந்த ஊரில் சம்பவம் | Woman rape Road Ujjain people filmed video

நெட்டில் போட்ட கொடுமை CM சொந்த ஊரில் சம்பவம் | Woman rape Road Ujjain people filmed video

கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மத்தியப்பிரதேசத்தில் அவமானகரமான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரில் கோய்லா பதக் எனும் பகுதி உள்ளது. பிசியான இந்த ஏரியாவில் குப்பை சேகரித்து பிழைப்பு நடத்தும் ஒரு பெண்ணை லோகேஷ் என்ற வெறியன் கண்டான். திருமணம்செய்து கொள்வதாக பெண்ணிடம் கூறியுள்ளான். அதை நம்பி அவனுடன் அந்தப்பெண் சென்றார். பெண்ணை வற்புறுத்தி மதுகுடிக்க வைத்தான் லோகேஷ். மதுபோதையில் பெண் தள்ளாடிய சமயத்தில் குப்பை தொட்டி மறைவில் பாலியல் பலாத்காரம் செய்தான். நடைபாதையில் அதுவும் பட்டப்பகலில் இந்த அக்கிரமத்தை லோகேஷ் செய்துள்ளான். அவ்வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும் யாரும் அவனை தடுக்கவில்லை. சத்தம் போடவும் இல்லை. மாறாக, அவன் பலாத்காரம் செய்வதை செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் போட்டு மத்தியப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கருத்து பதிவிட்டனர்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை