ஏற்காடு கொண்டை ஊசி வளைவில் அந்தரத்தில் நின்ற பஸ்! Chennai Tour Bus | Yercaud | Hairpin Bend
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து 40 பேர் கொண்ட குழு சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு பஸ்சில் சுற்றுலா சென்றனர். பஸ்சை முருகவேல் என்பவர் ஓட்டினார். ஏற்காட்டில் சுற்றி பார்த்துவிட்டு நேற்று சென்னை திரும்பினர். பஸ் மலைப்பாதையின் 14வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு அந்திரத்தில் நின்றது. அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியேறி உயிர் தப்பினர். லேசான காயமடைந்த டிரைவர் மற்றும் ஒரு சில பயணிகளை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 40 அடி பள்ளத்தில் விழ இருந்த பஸ் தடுப்பு சுவரில் இருந்த பெரியகருங்கல் தடுத்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.