காதலி கதை முடித்த காதலன் சொந்த அக்காவை சாய்த்த தம்பி young woman and boy dies illegal relationship
சென்னை பல்லாவரம் அருகே சங்கர் நகரைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி 33. கணவனை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வந்தார். தோல் கம்பெனியில் வேலை பார்த்தார். வீட்டிலேயே பெல்ட், பர்ஸ் உள்ளிட்டவற்றை விற்று வந்தார். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ஞான சித்தன் வயது 40 என்பவர் பெல்ட் வாங்க பாக்கியலட்சுமி வீட்டுக்கு வந்தார். அப்போது பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலிக்க துவங்கினர். ஞான சித்தன் தாம்பரம் மாநகராட்சியில் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். திருமணம் ஆகவில்லை. பாக்கியலட்சுமியை திருமணம் செய்ய தீர்மானித்தார். பாக்கியலட்சுமி வீட்டுக்கு ஞானசித்தன் அடிக்கடி வருவார். இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,, பாக்கியலட்சுமிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் ஞானசித்தனின் நண்பர். அவருடன் வெளியில் சென்று பாக்கியலட்சுமி உல்லாசமாக இருந்ததாக, ஞானசித்தனுக்கு தகவல் வந்தது. அதுபற்றி பாக்கியலட்சுமியிடம் ஞானசித்தன் கேட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நான்தான் உன்னை கல்யாணம் பண்ணப்போறேனே.. அவனுடன் இருக்கும் உறவை விட்டு விடு என ஞான சித்தன் கூறினார். என்னை கேட்க நீ யார்? நீ வேண்டுமென்றால் என்னை விட்டு விலகி விடு; நான் அவனையே கல்யாணம் செஞ்சுக்கிறேன் என கூறி, ஞானசித்தனை பாக்கியலட்சுமி திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. ஞானசித்தன் கோபத்துடன் சென்று விட்டார். நேற்றிரவு பாக்கியலட்சுமி வீட்டுக்கு ஞான சித்தன் வந்தார். சாரி சொல்லிவிட்டு வீட்டுக்குள் வந்தார். மது பாட்டில்களை வாங்கி வந்திருந்தார். பாக்கியலட்சுமி 2 பிள்ளைகளையும் வேறொரு அறையில் படுக்க வைத்துவிட்டு, ஞான சித்தனுடன் இன்னொரு அறையில் உல்லாசமாக இருந்துள்ளார். இருவரும் மது அருந்தினர். போதை தலைக்கேறியது. மீண்டும் பழைய பிரச்னையை ஞானசித்தன் எடுத்தார். நான் இருக்கும்போது எதற்காக அவனுடன் சென்றாய்? என கேட்டு தகராறு செய்தார். இதனால் மறுபடியும் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தில், அருகில் இருந்த கடப்பா கல்லை எடுத்து, பாக்கியலட்சுமியின் தலையில் பலமுறை அடித்தார், ஞான சித்தன். இதில் சம்பவ இடத்திலேயே பாக்கியலட்சுமி இறந்தார். பாக்கியலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர். வீட்டைவிட்டு வெளியே வந்த ஞான சித்தன் நேராக சங்கர் நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். போலீசார் பாக்கியலட்சுமி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்னை காதலிக்கும்போதே இன்னொருவருடன் தொடர்பு வைத்ததால் கொன்றதாக போலீசிடம் ஞானசித்தன் வாக்குமூலம் அளித்தார். தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 40). கணவர் இறந்து விட்டார். நிஷாந்த் 13 என்ற மகன் உள்ளான். ஆனந்தியுடன் அவர் தம்பி பாண்டீஸ்வரனும் வசித்து வந்தார். அக்கா தம்பி இருவரும் கூலி வேலை செய்தனர். பாண்டீஸ்வரன் மது போதைக்கு அடிமையானவன். சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. குடிக்க பணம் கேட்டு அக்காவை மிரட்டி அடித்து வந்தான். நேற்றிரவு குடிபோதையில் வந்த பாண்டீஸ்வரனை ஆனந்தி திட்டினார். வேலைக்கு போய் காசு கொண்டு வந்தால்தான் இனி சாப்பாடு; இல்லாவிட்டால் வீட்டு பக்கம் வராதே என சொல்லி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டீஸ்வரன், ஆனந்தி, நிஷாந்த் இருவரையும் இரும்புக்கம்பியால் தலையில் கொடூரமாக அடித்தான். நிஷாந்த் சம்பவ இடத்திலேயே இறந்தான். ஆனந்தி ரத்த வெள்ளத்தில் சாிந்தார். அக்காவும் நிஷாந்தும் இறந்து விட்டனர் என நினைத்து பாண்டீஸ்வரன் பயந்து போய் விட்டார். வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இன்று காலை பாண்டீஸ்வரனை தேடி அவனது நண்பர்கள் வந்தனர். பாண்டீஸ்வரன் தூக்கில் தொங்குவதையும் நிஷாந்த், ஆனந்தி ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். போலீசார் வந்தபோது ஆனந்திக்கு மட்டும் உயிர் இருந்தது. அவரை உடனடியாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாண்டீஸ்வரன், நிஷாந்த் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.