உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / இளைஞர் வெட்டி சாய்ப்பு: அதிர்ச்சியில் தஞ்சை மக்கள் Youth dies hacked to death Thanjavur police cri

இளைஞர் வெட்டி சாய்ப்பு: அதிர்ச்சியில் தஞ்சை மக்கள் Youth dies hacked to death Thanjavur police cri

தஞ்சாவூர் புதுப்பட்டினம் ஊராட்சி பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் சசிக்குமார் (வயது 20). ஆட்டோ டிரைவர். திருமணமாகாதவர். வழக்கம்போல இன்று காலையில் வீட்டில் இருந்து கிளம்பினார். மதியம் 12 மணியளவில் விளார் ஊராட்சி கலைஞர் நகர் பகுதியில் தெரு ஓரத்தில் சடலமாக கிடந்தார். அரிவாளால் வெட்டப்பட்டும், தலை சிதைக்கப்பட்டும் சசிக்குமார் கொலை செய்யப்பட்டிருந்தார். ரத்த வெள்ளத்தில் வாலிபர் இறந்து கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அடையாள அட்டையை வைத்து, புதுப்பட்டினத்தைச் சேர்ந்த சசிக்குமார் என்பது தெரிய வந்தது. அவரது குடும்பத்தினர் வந்து சசிகுமார்தான் என அடையாளம் காட்டினர். தாயும் சகோதரியும் கதறி அழுதனர். சசிகுமார் தலையை சரமாரி வெட்டி அடையாளம் தெரியாத அளவுக்கு முகத்தை கொலையாளிகள் சிதைத்துள்ளனர். உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகுமார் ஆட்டோ ஓட்டியதோடு டைல்ஸ் ஒட்டும் வேலையும் செய்து வந்தார். ஆட்டோ ஸ்டாண்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமா? அல்லது காதல் விவகாரத்தில் சிக்கினாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடத்தின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் பிறகுதான், புதுப்பட்டினத்தைச் சேர்ந்த சசிக்குமார், விளார் ஊராட்சிக்கு சசிகுமார் ஏன் வந்தார்? கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவரும் என போலீசார் கூறினர். தஞ்சையில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் தலை சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #AutoDriver #YouthDies #HackedToDeath #Thanjavur #Police #CrimeInvestigation #CCTVcamera #LoveAffair #PersonalEnmity #JusticeForVictims #SafetyConcerns #ViolentCrime #CommunityAwareness #CrimeScene #NeedForChange #SocialIssues #YouthViolence #PreventCrime #TragicIncident #LocalNews

செப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை