செய்தி சுருக்கம் | 08 AM | 07-10-2024 | Short News Round Up | Dinamalar
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய விமானப்படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப்படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது. இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், நிகழ்ச்சியின்போது நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லை மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கினர். குடிநீர் கூட கிடைக்கவில்லை. பலர் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த செய்திகள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக்கூட முறையாக ஒருங்கிணைக்க தவறிய நிர்வாக திறனற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள் என பழனிசாமி கூறியுள்ளார். இதேபோல் பாமக தலைவர் அன்புமணியும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசத்தை காண வந்த 5 பேர் பலியான சம்பவத்துக்கு, போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். வெற்று சவடால்களை விடுக்காமல் இனிவரும் காலங்களிலாவது இத்தகைய சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை திராவிட மாடல் அரசு கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். அரசுக்கும் அவருக்கும் 7ம் பொருத்தம் தான். திமுக அரசை நோக்கி கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களின் தன்னிச்சையான செயல்பாட்டுக்கு தடை ஏற்படுத்தினார். அரசு பரிந்துரைத்து அனுப்பிய சட்ட மசோதாக்களை கிடப்பில் வைத்தார். பல்கலை நிர்வாகம், துணை வேந்தர் நியமனங்களில் தலையீடு என ஆளும் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்தார். அரசு நிர்வாகத்தில் குறுக்கிடுவதாக கவர்னருக்கு எதிராக திமுகவும், கூட்டணி கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன. அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் மோதல் ஏற்பட்ட போதும், கவர்னர் தான் நினைத்ததை தொடர்ந்து செய்தார். மற்ற கவர்னர்கள் போல் இல்லாமல், நிறைய பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று மறைமுகமாக அரசியல் பேசினார். திமுகவின் அடிப்படை சித்தாந்தத்தை விமர்சித்தார். சட்டம் ஒழுங்கு விஷயத்திலும் தலையிட்டு அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்டார். இரு தரப்புக்கும் இடையில் முட்டல், மோதல் தொடர்ந்த நிலையில், லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. ஆனாலும், மத்தியில் பா.ஜ மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டதால், திமுக அரசு நினைத்தபடி எதையும் செய்ய முடியவில்லை. மாறாக திட்டங்களுக்கு அளிக்க வேண்டிய நிதியில் கை வைத்தது மத்திய அரசு. இதனால், சீரான நிர்வாகம் செய்வதில் தமிழக அரசுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது. இதை சரி செய்ய மத்திய அரசுடன் இருக்கும் கடுமையான மோதல் போக்கை தவிர்க்க திமுக முடிவு செய்தது. முதல் வேலையாக முதல்வர் ஸ்டாலின் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அதன் பலனாக, சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு நிதி வழங்க, மத்திய அரசு ஒப்புக் கொண்டது. டில்லி - சென்னை இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், கவர்னர் இப்போது தனி பாதையில் பயணிக்க துவங்கி இருக்கிறார். மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் பற்றி பாராட்டி பேசும் கவர்னர், தினம் ஒரு நிகழ்ச்சி என திட்டமிட்டு இயங்கி கொண்டிருப்பதாக ராஜ்பவன் வட்டாரங்கள் கூறுகின்றன. வள்ளலார் பிறந்த நாளுக்கு தனி நிகழ்ச்சி நடத்திய கவர்னர், சனாதனத்தை ஜாதியுடன் ஒப்பிட்டுப் பேசி தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடாது என்றார். 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டிகள் கவர்னர் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகள் பெறப்பட்ட நிலையில், சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது அடுத்ததாக கம்பராமாயணத்தை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக மாநிலம் முழுதும் 10 மையங்களில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்த உள்ளார். இன்னொரு பக்கம் கவர்னர் அலுவலகத்துக்கு வரும் புகார் கடிதங்கள் அனைத்தையும் பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை பணித்திருக்கிறார் ரவி. அவர்களும், கலெக்டர், எஸ்.பி அலுவலகத்தில் நேரடியாக பேசி புகார்கள் மீது உடடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுகின்றனர் இதெல்லாம் திமுக தலைமைக்கு தெரிந்தும், சமீப காலமாக கவர்னர் செயல்பாடுகளில் தலையிடுவதில்லை. கவர்னர் தனி ரூட்டில் பயணிப்பதை திமுக அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.