உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 11-05-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 11-05-2025 | Short News Round Up | Dinamalar

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள நேற்று பரஸ்பரம் முடிவானது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், முப்படைத் தளபதி அனில் செளஹான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். பாகிஸ்தான் விவகாரத்தில் முப்படைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மே 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை