உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 07-02-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 07-02-2025 | Short News Round Up | Dinamalar

திருப்பரங்குன்றம் மலையை காக்க பிப்ரவரில் 4ல் இந்து அமைப்புகள் அறப்போராட்டம் அறிவித்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கருதி மாவட்ட நிர்வாகம் பிப்ரவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். அறப்போராட்டத்திற்கு அனுமதி கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் நடந்த வழக்கில் மதுரை பழங்காநத்தத்தில் ஒருமணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அடுத்த சில நிமிடங்களில் பழங்காநத்தத்தில் குவிந்தனர். காரைக்குடியில் இருந்து உடனடியாக பழங்காநத்தம் வந்த எச்.ராஜா 6 நிமிடங்கள் பேசினார். அதில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து திமுக அரசை கடுமையாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் தாங்களாக முன்வந்து மதக்கலவரத்தை துாண்டும் வகையில் பேசியது, பகைமையை ஏற்படுத்தும் வகையில் பேசியது, பொது அமைதி, ஒழுக்கத்தை பாதிக்கும் வகையில் பேசியது, கோர்ட் உத்தரவை மதிக்காமல் பேசியது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி