/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 PM | 22-10-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 PM | 22-10-2024 | Short News Round Up | Dinamalar
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவுதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவில் இன்றும், நாளையும் நடக்கிறது. உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளை மையமாக வைத்து இந்த உச்சி மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டில்லியில் இருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றார்.
அக் 22, 2024