/ தினமலர் டிவி 
                            
  
                            /  செய்திச்சுருக்கம் 
                            / செய்தி சுருக்கம் | 08 AM | 29-10-2024 | Short News Round Up | Dinamalar                                        
                                     செய்தி சுருக்கம் | 08 AM | 29-10-2024 | Short News Round Up | Dinamalar
தீபாவளி கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு செல்ல துவங்கியுள்ளனர். சென்னையில் பஸ் மற்றும் ரயில் நிலையங்கள் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 11,176 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க பயணிகள் கூட்டம் அலைமோதியது. அரசு பஸ்களில் 1.31 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் 4.29 லட்சம் இருக்கைகள் காலியாக உள்ளது என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
 அக் 29, 2024