உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / ெய்தி சுருக்கம் | 08 PM | 03-08-2025 | Short News Round Up | Dinamalar

ெய்தி சுருக்கம் | 08 PM | 03-08-2025 | Short News Round Up | Dinamalar

ஜனாதிபதி திரவுபதி முர்முவை ராஷ்ட்ரபதி பவனில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இன்று காலை நடந்த இந்த சந்திப்பு குறித்து ஜனாதிபதி மாளிகை போட்டோ பதிவை வெளியிட்டது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பிரதமரின் சமீபத்திய வெளிநாட்டு பயணம், சுதந்திர தின விழா கொண்டாட்டம், துணை ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் அவர் ஜனாதிபதியுடன் பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது. பீகாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. அது குறித்து சிறப்பு விவாதம் நடத்த கோரி சபையை நடத்த விடாமல் அமளி செய்கின்றனர். இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளது. அத்துடன் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் அபராத வரி விதிப்போம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி ஜனாதிபதியை சந்தித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆக 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ