/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | முதல்வர் விஜய் ஆய்வு | 8 PM | 07-07-2026
இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | முதல்வர் விஜய் ஆய்வு | 8 PM | 07-07-2026
இந்தோனேசியா பார்லிமென்டில் பிரதமர் மோடி பேசினார். பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவும், இந்தோனேஷியாவும் ஒரே மாதிரியான கொள்கையை கொண்டுள்ளன. கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் போது, இந்தியாவுக்கு இந்தோனேஷியா உறுதியான ஆதரவு தெரிவித்தது. இதற்காக அதிபர் பிரபோவுக்கும், உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டு நடவடிக்கை வழிகாட்டு முறைகளின்படி பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் பணியாற்றி வருகிறது. இந்தோ பசிபிக் பகுதி தடையற்ற, சுதந்திரமான அனைவருக்கும் ஏற்ற பகுதியாக இருக்க வேண்டும். இந்த பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும். இதனையே ஆசியான் அமைப்பின் மையக்கருத்தாக அமைத்துள்ளோம்
ஜூலை 07, 2026