உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 10-08-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 10-08-2025 | Short News Round Up | Dinamalar

நம் நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் கடந்த மாதம் 21ம் தேதி ராஜினாமா செய்தார். இப்போது அந்த பதவி காலியாக இருக்கிறது. அடுத்த மாதம் 9ம் தேதி புதிய துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. லோக்சபா, ராஜ்யசபா மற்றும் நியமன எம்பிக்கள் சேர்ந்து ஓட்டுப்போட்டு துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர். தேர்தல் நடக்கும் அன்றே ஓட்டு எண்ணப்படும். இதற்கான வேட்பு மனு தாக்கல் 7ம் தேதி துவங்கியது. இம்மாதம் 27ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. பாஜ தலைமையிலான ஆளும் கூட்டணி நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் நிலையில், இண்டி கூட்டணியை சேர்ந்த கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளன. அதே நேரம் பாஜ கூட்டணி தனது வேட்பாளரை அறிவித்த பின்னரே, இண்டி கூட்டணி வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று கார்கே சொன்னதாக காங்கிரஸ் வட்டாரம் கூறியது.

ஆக 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை