இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | விஜய்க்கு 23 நிபந்தன | 8 PM | 10-09-2025
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டசபை தேர்தலில் முதல்முறையாக களம் காண்கிறது. நடிகர் விஜய் செப்டம்பர் 13ம்தேதி திருச்சியில் இருந்து பிரசாரத்தை துவங்குகிறார். டிவிஎஸ் டோல்கேட்டில் பிரசாரத்தை துவங்கும் அவர், திருச்சி தலைமைத் தபால் நிலையம், பாலக்கரை, காந்தி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் இருந்தபடி பிரசாரம் செய்கிறார். திருச்சி மரக்கடை பகுதிக்கு வந்த பிறகு அங்கு மக்கள் மத்தியில் பேசுகிறார். முதலில் சத்திரம் பஸ் நிலையத்தில் விஜய் பேச திட்டமிட்டிருந்தார். அதற்காக தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், சத்திரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடும் என்பதால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஸ்ரீரங்கத்திலும் விஜய் பேச அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப்பிறகு கடைசியில், திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பேச போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். அதுவும் 30 நிமிடம் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மரக்கடை பகுதியில் விஜய் பேசும் கூட்டத்துக்கு மொத்தம் 23 நிபந்தனைகளை திருச்சி போலீசார் விதித்துள்ளனர். செப்டம்பர் 13ம் தேதி காலை 10:30 மணியில் இருந்து 11 மணி வரை மட்டுமே விஜய் பேச வேண்டும்; காலை 9:30 மணிக்குள் மரக்கடை பகுதிக்கு தொண்டர்கள் வந்துவிட வேண்டும். விஜய் ரோட் ஷோ நடத்தக்கூடாது. பிரசார வாகனத்தில் உட்கார்ந்தபடிதான் விஜய் வர வேண்டும். நின்று கொண்டு கை ஆட்டிக் கொண்டு வரக்கூடாது. பொதுமக்கள், வணிர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்விதமாக தவெகவினர் எந்த செயலையும் செய்யக்கூடாது. விஜய் வரும்போது அவரது வாகனத்துக்கு முன்னும் பின்னும் 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதற்கு மேல் வாகனங்கள் வந்தால் அனுமதிக்கப்பட மாட்டாது. மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்கழகமே செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள் கர்ப்பிணிகள் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரக்கூடாது போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது. கூம்பு வடிவ ஸ்பீக்கர்களை பயன்படுத்தக்கூடாது. தவெக தொண்டர்கள் மிக நீளமான கம்புகளில் கொடியை எடுத்து வரக்கூடாது பள்ளிக்கு செல்பவர்கள், விமான நிலையம் செல்பவர்கள் மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு வழி விட வேண்டும் ஆம்புலன்ஸ்கள் வந்தால் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. உடனே ஒதுங்கி வழி விட வேண்டும். இதுபோல 23 நிபந்தனைகளை திருச்சி போலீசார் விதித்துள்ளனர். போலீஸ் விதித்துள்ள நிபந்தனைகளை தவெக நிர்வாகிகள் பரிசீலித்தனர். நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக உறுதிமொழி கடிதத்தை திருச்சி போலீஸ் துணை கமிஷனர் சிபினிடம் திருச்சி மாவட்டபொறுப்பாளர் கரிகாலன் வழங்கினார். அதைத் தொடர்ந்து, விஜய் பிரசார நிகழ்ச்சிக்கு அனுமதி கடிதத்தை துணை கமிஷனர் சிபின் வழங்கினார். விஜய் ரோட் ேஷாவுக்கு அனுமதி இல்லை; பிரசார வாகனத்தில் நின்று கொண்டு கையை ஆட்டிக் கொண்டு வரக்கூடாது என்ற நிபந்தனைகள் போலீசின் கெடுபிடியை காட்டுவதாக, தவெக தொண்டர்கள் கொதித்து போயிருக்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் பேச விஜய்க்கு அனுமதி வழங்கப்படாததும் தவெகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் பிரசாரத்துக்கு போலீஸ் கெடுபிடி நிபந்தனைகள் விதிப்பது குறித்த அமைச்சர் நேருவிடம் கேட்டதற்கு, அதிமுக ஆட்சியில எங்களுக்கு அனுமதி கொடுத்தாங்களா? என திரும்ப கேட்டு திடுக்கிட வைத்தார். அனுமதி கொடுத்தா சரிம்பாங்க; இல்லன்னா திட்டுவாங்க இதான் அரசியல் எனவும் சொன்னார். #TVK #ActorVijay #Campaign #AssemblyElections2026 #Trichy #Police #Conditions #TVKCadre #Shocked #DMK #BJP #ADMK #Politics #TamilNadu #ElectionCampaign #VijaySpeech #Politicalrally #Election2026 #TamilPolitics #TrichyPolitics