உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 12-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 12-01-2025 | Short News Round Up | Dinamalar

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நடக்கிறது. தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டோக்கன் பெற்ற மக்கள் ரேஷன் கடையில் வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். திருப்பூரில் அப்படி ஒரு ரேஷன் கடையில் மக்கள் பொங்கல் பரிசு வாங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. திருப்பூர் மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட பெரிய தோட்டம் பகுதியில் இருக்கும் ரேஷன் கடை தான் அது. இந்த கடை கூரையின் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் கூரை கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் கட்டடத்தை புதுப்பித்து தரும்படி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவரை சரி செய்யாததால், எங்கே இடிந்து விழுந்துவிட போகிறது என்ற பயத்தில் அப்பகுதி மக்கள் ஹெல்மெட் அணிந்து வந்து பொங்கல் பரிசு வாங்கி சென்றனர்.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ